உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு அபாயம் – 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (30) பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது ஹைபோரஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினருக்குத் தேவையான சமைத்த உணவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

விளையாட்டு மைதானங்களுக்கு தவிசாளர் மாஹிர் கள விஜயம்

editor

கெப் வண்டி மோதி பஸ் விபத்து- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !