அரசியல்உள்நாடு

யோஷித ராஜபக்‌ஷவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 துப்பாக்கிகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்

மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து நூற்று எண்பத்தி இரண்டு துப்பாக்கிகள் மட்டுமே பெறப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் யோஷித ராஜபக்ஸவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

editor

35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..!

editor

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு