உள்நாடுபிராந்தியம்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (28) மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது.

வீட்டொன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண் நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையைச் செய்த சந்தேக நபர் நேற்று (28) இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

மீண்டும் மண்சரிவு அபாயம் – பல குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

editor

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )