அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிகளுக்கும் இடையில் நேற்று (27) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிலிண்டர் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான சதிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் மேலும் பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரேலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சகல ஜனநாயக அமைப்புகளும் ஜேவிபி மயமாக்கலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்