அரசியல்உள்நாடு

மின்சாரக் கட்டண குறைப்புடன் நீர்க் கட்டணங்களும் குறையும் – பிரதி அமைச்சர் டி.பி.சரத்

நீர்க் கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர்க் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டுமென சில தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீர்க் கட்டண திருத்தம் தொடர்பான அறிவியல் ரீதியான விடயங்களைக் கலந்துரையாடி, எதிர்காலத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.” என பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (17) நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணம் சுமார் 20 வீதம் குறைக்கப்பட வேண்டுமென்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, மின் கட்டணம் குறைக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

வாக்களிக்கவுள்ள ஊழியர்களது விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

editor

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor