உள்நாடுபிராந்தியம்

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை, பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸார் மற்றும் பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர

editor

IMF உடன் செயற்பட குழு நியமனம்