உள்நாடு

சிகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டு பெண் நேற்றைய தினம் சிகிரியாவை பார்வையிடுவதற்கு சென்றிருந்த போது சிகிரியாவுக்கு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார்.

இதன்போது இந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிரியா கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்

editor

நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின் விநியோகத் தடை

வலம்புரி சங்கை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இளைஞர் கைது.