உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு பேர் கைது

editor

இலங்கைக்கான சீன தூதுவர் நியமனம்

BREAKING NEWS – இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது

editor