உள்நாடு

பாடசாலை பைககளை நன்கொடையாக வழங்கியது சீனா

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)’ மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5000 பாடசாலை பைகள் இன்று (07) பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொக் ((Qi Zenhong) அவர்களினால் குறித்த பாடசாலை பைகள் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவிடம் நன்கொடையின் அடையாளமாக கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகளும் கிராமிய அபிவிருத்திக்கான சீன அறக்கட்டளையின் உதவிப் பணிப்பாளர் Zou Zhiqiang அவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

Related posts

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

editor

தமிழரசுக் கட்சி திருகோணமலையில் வீட்டுச்சின்னத்தில் போட்டி – சுமந்திரன்

editor