அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை பூரணப்படுத்தி சட்ட நடவடிக்கைகளுக்காக விரைந்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்தக் காலம் நிறைவடைந்த போதிலும் வேட்பாளர்கள் குழு வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத 5 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்கவில்லை மற்றும் அவர்களில் 7 பேர் மீது இதுவரை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 38 பேர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓட்டமாவடியில் இருளில் மூழ்கிய வீதி – பாம்புகள் நடமாடுவதாக பிரதேச மக்கள் கவலை!

editor

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்

editor

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்