வகைப்படுத்தப்படாத

கன்பரா சூரிய மின்சக்தி நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியாவுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கன்பரா நகரில் உள்ள சூரிய மின்சக்தி நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை அவுஸ்திரேலிய இருதரப்பு உறவுகளின் மைல்கல்லாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் அழைப்பின் பேரில் அவுஸ்ரேலிய சென்றுள்ள ஜனாதிபதி கன்பரா நகரில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் நேற்று கலந்துகொண்டார்.

பின்னர் கன்பரா நகரில் உள்ள கம்பா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி , வழிபாடுகளில் ஈடுபட்டு அவுஸ்திரேலிய தூதரகத்தில் இடம்பெற்ற இலங்கை மக்களுடனான நட்புறவு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்க்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரும் கலந்துகொண்டனர்.

Related posts

சிரியாவில் 9 பேர் பலி

Twenty Lankan fisher boats Maldives bound

மண்சரிவு அபாயம் நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை தொண்டமான். மஹிந்தாந்த .வேலுகுமார் கல்லூரிக்கு உடனடி விஜயம்