உள்நாடு

50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்து – நால்வர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) வேலணை – துறையூர் பகுதியில் வைத்து பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பூச்சி கொல்லி மருந்து போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பூச்சி கொல்லிகளின் பெறுமதியானது சுமார் 50 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பு

editor

எதிர்வரும் செவ்வாயன்று முதல் இரவு வேளைகளில் மின்துண்டிப்பு

புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்