உள்நாடு

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் தொடர்பில் எச்சரிக்கை

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஔிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கைக்கான IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி – ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு

editor

பவுசரில் கொண்டு சென்ற டீசலை திருடிய சாரதியும், உதவியாளரும் விளக்கமறியலில்

editor

ரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும்