அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு எதிர்ப்பு – திரண்ட மக்கள் – வீடியோ

தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்கவிற்கு பிங்கிரியவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் போக்குவரத்து சேவை ஒப்பந்தம் பெறுவது தொடர்பாக மற்றொரு நபருடன் அந்த இடத்திற்கு வந்த போது இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றின் தொழிலாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களே வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க இன்று தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவைகளை வழங்கக்கூடிய மற்றுமொரு தரப்பினர் தொடர்பில் கலந்துரையாடியதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மற்றுமொரு நபருடன் வந்த விஜேசிறி பஸ்நாயக்கவுக்கு தற்போது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் குழுவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வீடியோ

Related posts

சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

TNA உறுபினர்களுடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்