உள்நாடு

லொறியின் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலி

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி 1 வயது 10 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறுமி, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறியொன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் மாபெரும் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

editor

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து சுமந்திரன் கருத்து

editor

இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அநுர

editor