வகைப்படுத்தப்படாத

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக, 2018 ஆம் ஆண்டு மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், 2.88 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு, அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.

இதற்கமைய மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு உதவும் வகையில், இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத தேசமாக மாற்றும் இலக்குடன், கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்துக்காக, 2.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்காகவும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தற்போது இடம்பெற்று வரும் வேலைத்திட்டங்களுக்காகவும், இந்த நிதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் எல்லை பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், 3 இலட்சத்து 80 ஆயிரம் டொலர்கள், அமெரிக்காவால் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Cabinet papers to review Madrasas & MMDA

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய வாலிபர்-(VIDEO)