உள்நாடு

சில பகுதிகளில் முட்டை விலை குறைவடைந்துள்ளது

நாட்டில் சில பகுதிகளில் முட்டையின் விலை குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை, தற்போது 25 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வியாபாரிகள், பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முட்டை மற்றும் கோழி இறைச்சியை சேகரித்து வைத்திருந்தாலும், சரியான தேவை இல்லாததால், சில பொருட்களின் விலைகள் அடுத்த சில நாட்களில் மேலும் குறைவடையலாம் என வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி