உள்நாடு

16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 16,000 மெற்றிக் தொன்களாகும்.

இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி என்பதோடு, மீதமுள்ள 10,000 மெற்றிக் தொன் நாட்டரிசியாகும்.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் இதுவரை 16,000 மெற்றிக் தொன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி

சவால் என தெரிந்தும் களமிறங்கினேன் – நான் டீலர் அல்ல லீடர் – மனோ கணேசன்

editor

மூன்று மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை