உலகம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது.

இதனால் வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.