உள்நாடுகாலநிலை

இன்று மற்றுமொரு தாழமுக்கம் உருவாக வாய்ப்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (15) தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் தாழமுக்க மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதோடு, அது மெதுவாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த மண்டலம் எதிர்வரும் இரு நாட்களில் நாட்டின் வடபகுதியை அண்மித்ததாக, தமிழக கரையை நோக்கி நகரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

குறித்த தொகுதி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, இன்றையதினம் (15) கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

நாட்டின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடி உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் இந்த மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி – முன்னாள் எம்.பி திலும் அமுனுகம

editor

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் இரத்து செய்யப்படுமா ? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

editor