உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் நேற்று (12) ஏற்பட்ட தேங்காய் விலை உயர்வினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக உள்ளுர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 150 – 200 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சந்தையில் தேங்காய்களை கொள்வனவு செய்து எண்ணெய் தயாரிப்பதன் மூலம், எவ்வித இலாபமுமடைய முடியாதென, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் இலங்கை

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை – மௌனம் கலைக்க போகும் சபாநாயகர்

editor