உள்நாடு

கண்டி அரசர்களின் அரண்மனை தொல்பொருள் நூதனசாலை மீள திறப்பு

நாட்டின் செழுமையான கலாசார பாரம்பரியத்தின் அடையாளமான கண்டியை ஆண்ட அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் என்பன மக்கள் பார்வைக்காக நேற்று புதன்கிழமை (11) மீண்டும் திறக்கப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திறப்பு விழாவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியும் கலந்து கொண்டார்.

இந்த கலாசார பாதுகாப்பு திட்டம் அமெரிக்க தூதரகத்தின் நிதி உதவியின் கீழ் கலாசார அமைச்சு மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வரலாற்று உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.

இதன் மூலம் பார்வையாளர்களின் அணுகல் மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்த முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் இலங்கையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பை எடுத்துக்காட்ட முடிகின்றது.

சுற்றுலா அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் கண்டியை ஆண்ட அரசர்களின் அரண்மனையை பாதுகாத்தல் மூலம் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவு கட்டியெழுப்பப்படுகிறது.

Related posts

கொரோனா தடுப்பூசி : எம்.பி’க்களுக்கு இன்று செலுத்தப்படும்

கொவிட் தொற்றினால் 98 இலங்கையர்கள் மரணம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்திப்பு