உள்நாடு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு