வகைப்படுத்தப்படாத

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால், நாளைய தினம் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

தமக்கு தொழில் வழங்க வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து  வடக்கு, கிழக்கிலுள்ள பட்டதாரிகள் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரச சேவையிலும், வடக்கு, கிழக்கு மாகாண அரச சேவையிலும் காணப்படுகின்ற பல வெற்றிடங்களை இந்த  வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பினால் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வாக அமையும் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்களுடனும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வைக் காண அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

அனுமதியின்றி செய்த காரியத்தால் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா பயணமானார்

රුපියලේ අගය පහත වැටිමක්