அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக இன்றைய தினம்(06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க இன் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் 46438 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.

அந்தவகையில் ஐ.தே.க இன் பாராளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (06) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்