அரசியல்உள்நாடு

சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல அவர்களை அண்மையில் (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பில் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நீண்டகாலமாகக் காணப்படும் தொடர்பை நினைவுகூர்ந்தார்.

மேலும், இரண்டு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் காணப்படும் தொடர்புகளை தொடர்ந்தும் வலுவாகப் பேணுவதற்கும், பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற நட்புரீதியான கலந்துரையாடலில், பொருளாதார மற்றும் வர்த்தக நடவடடிக்கைகள் தொடர்பாகவும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளுதல் போன்ற இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

அருட்தந்தை ஜிவந்த பீரிஸிடமிருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு

வாகன இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

இலங்கையர்களுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து