உள்நாடுகாலநிலை

அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுககும் அபாயம்

வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுககும் அபாயம் காணப்படுவதால் இக்குளத்தின் கீழ் உள்ள சாந்தசோலை கிராமமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம், குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்தமையால் குளத்தின் அணைக்கட்டின் மேலாக நீர் வழிந்தோடுகின்றது.

மேலும் குளத்தின் அணைக்கட்டின் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அதிக நீர்வரத்து காரணமாக பல இடங்களில் அடைக்கப்பட்டு பெருமளவில் அரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குளக்கட்டு உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

சித்திரைப் புத்தாண்டுக்கான சுகாதார வழிகாட்டி

‘விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரவில்லை’

வனசீவராசிகள் அமைச்சரின் வாகனம் மோதியதில் ஒருவர் பலி [VIDEO]