அரசியல்உள்நாடு

மீண்டும் சிறிகொத்தவுக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருந்தால், மீண்டும் சிறிகொத்தவுக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இல்லை. அவர் வந்ததும் நாங்கள் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளோம்.”

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ராஜகருணா, அனைத்து வலதுசாரி சக்திகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைத்து வலதுசாரி அரசியல் செய்யும் குழுக்களுக்கும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இக்கட்சியுடன் ஒன்றிணைந்து இந்தப் பிரிவினையை இல்லாதொழித்து எதிர்காலத்தில் ஒரே வேலைத்திட்டத்தை முன்வைக்க பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐ.தே.க குழுக்களை ஒன்றிணைத்துக் கொண்டு எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.”

Related posts

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு குறித்த மெட்டா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு

editor

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழுவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது

editor