அரசியல்உள்நாடு

தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை – நிஹால் தல்துவ

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி, மன்னார் மற்றும் பியகம பகுதியைச் சேர்ந்த 49, 19 மற்றும் 26 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களைத் தவிர எந்தவொரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மாலை வேளையில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் அனைவரும் நேரத்துடனே வாக்களிக்க வருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழகங்களது ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு

அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி – நாமல் ராஜபக்‌ஷ

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை நீக்குவதற்கு தீர்மானம்

editor