அரசியல்உள்நாடு

1600 ஆக அதிகரித்த பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1256 முறைப்பாடுகளும், 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 107 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 15 வன்முறைச் சம்பவங்கள்பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1365 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 277 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்

ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே, அது நடக்காது – ஜனாதிபதி அநுர

editor

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் நீக்கம்