அரசியல்உள்நாடு

அச்சமில்லாது இலங்கைக்கு வாருங்கள் – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விஜித ஹேரத் அழைப்பு

அச்சமில்லாமல் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்துகிறோம் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளோம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் விவகாரம், சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் சிவில் பிரஜைகள் மீது தாக்குதல் இடம்பெறும் என்று தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வு பிரிவு ஊடாக தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்

மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது – விமல் வீரவன்ச

editor