உள்நாடுகாலநிலை

காற்றின் வேகமானது அதிகரிக்கும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

பதவியை இராஜினாமாச் செய்தார் மருத்துவர் ஜயங்க திலகரத்ன

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு