உள்நாடுகாலநிலை

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

பிரதான ரயில் பாதையில் தாமதம்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இலங்கைக்கான போட்டி அட்டவணை