அரசியல்உள்நாடு

சஜித் முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது – புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

Related posts

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் – ரஞ்சித் சியம்பலாபிடிய

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்