அரசியல்உள்நாடு

கோட்டா செய்ததையே அநுரவும் செய்கிறார் – மஹிந்தானந்த

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களுக்கு நிகரானவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், அவரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 993 வாகனங்களை ஏனைய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளித்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் குறைத்து, பால் தேநீருக்குப் பதிலாக சாதாரண தேநீரை வழங்கினார், ஜனாதிபதி மாளிகைக்குப் பதிலாக சிறிய வீடொன்றில் தங்கியிருந்தார்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அதிக எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும், அவ்வாறான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இதுவே நேர்ந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து பரந்த எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மேல்மாகாண பாடசாலைகள் இன்று முதல் வழமைக்கு

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அனுரவிற்கு சாதகமான நிலை

editor

அஜர்பைஜானில் இறந்த 3 இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு [VIDEO]