அரசியல்உள்நாடு

ரணிலின் தலைமையில் கூட்டணியின் கூட்டம் – தீர்மானம் எட்டப்படவில்லை

பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (26) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் , ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பலமான எதிர்க்கட்சியொன்ற அமைப்பது தொடர்பிலும் இங்கு யோசனைகள் முன்வைக்க பட்டுள்ளன.

இருந்தபோதும், இன்றைய பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.

பொது தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதால் பெயர் மற்றும் சின்னம் என்பவற்றை தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

Related posts

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது

editor

MV X-Press Pearl : பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று

சிறைக்கைதிகள் 228 பேர் விடுதலை