அரசியல்உள்நாடு

தேவை ஏற்பட்டால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் – அமைச்சர் டிரான் அலஸ்

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், வன்முறை வெடித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் இன்று சனிக்கிழமை (21) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 705 பேர் கைது

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

பெட்ரோல் என கூறி சிறுநீர் விற்பனை