அரசியல்உள்நாடு

மதுபோதையில் தேர்தல் பணிகளை செய்தவர் கைது

தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Related posts

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்

ஜோன்ஸ்டனுக்கு மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்