அரசியல்உள்நாடு

எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை – 150 இற்கும் மேற்பட்ட எம்.பிக்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அநுர

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பன்னல பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு சொன்னாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை. எமது பயணத்தை இனி தோற்கடிக்க முடியாது. ரணில் சஜித், நீங்கள் அறிய மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். விரைவில் பாராளுமன்றத்தை கலைப்போம்.

இந்த பாராளுமன்றத்தில் அநாகரீகமாக அலறல். கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

இப்படிப்பட்ட பாராளுமன்றம் தேவையா ? இன்னும் ஒன்றரை மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.” என்றார்.

Related posts

தடுப்பூசிகளை தெரிவு செய்வதில் காத்திருக்க வேண்டாம்

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

´MV Xpress pearl´ குறித்து அரசு கவனம்