அரசியல்உள்நாடு

சஜித் தமிழர் சகோதர்களுக்கு ​நேர்மையான செய்தியை வழங்கி இருக்கிறார் – மனோ எம்.பி

சஜித் பிரேமதாசவின் தலமையில் நாங்கள் இலங்கை அடையாளத்தை கொண்ட ஒரு நாட்டை ஒரு அரசாங்கத்தை உருவாக்க இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் எமது உடன் பிறப்புக்களுக்கு நான் ஒரு செய்தியை கூற விரும்புகிறேன், ஜக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் ஈழத் தமிழர் சகோதர்களுக்கு உரிய, உரித்தான, ​நேர்மையான செய்தியை வழங்கி இருக்கிறார்.

13 ஆவது திருத்தம், மாகாண சபைகளை அமர்த்தும் சட்டம் இவை தொடர்பான தனது உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறார், அது மட்டுமின்றி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல் படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்.

வடக்கு, கிழக்கில் இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் அங்கே பாரிய குடிப்பெயர்வு இடம்பெறுகிறது.

13 ஆவது திருத்த சட்டம் மாகாண சபைகளை அமைக்காவிட்டால் சமஷ்டி வந்தாலும் கூட அங்கு வாழ்வதற்கு தமிழ் மக்கள் எஞ்சி இருக்க மாட்டார்கள் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் அதற்கு வாய்ப்பு வழங்கக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என தெரிவித்தார்.

Related posts

ஊரடங்கு மேலும் நீடிப்பு

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது