அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபை தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,  வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

ரயிலுடன் வேன் மோதி விபத்து – ஒருவர் காயம்

editor

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

பூங்காக்கள், சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் திறப்பு