அரசியல்உள்நாடு

பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரங்கள்

பெருந்தோட்ட மக்களின் உண்மையான சமூகமயமாக்கலுக்கு அவர்கள் அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி பத்திரங்களை வழங்குவதாகவும், வசிப்பிட உரிமையை இனி சலுகைப் பத்திரத்தில் மட்டுப்படுத்தாமல் இது சம்பந்தமான ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தொடர்கிறது என பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே தமக்காக உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக நேற்று (31) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தோட்டக் கம்பனிகள் அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்து அரச தலையீட்டில் வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், சகல வசதிகளுடனும் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனவும் தோட்ட மக்களை உன்மையாவே சமூகமயப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்!

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

பொலிஸார் சீருடை இல்லாமல் பணியில் ஈடுபடக்கூடாது – மனோகனேசன்