உள்நாடு

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்லைன் முறை மூலம் தினமும் இரவு 7.00 மணிக்கு ஆசன ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை, திருத்தம் செய்து காலை 10.00 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், கணினி அமைப்பின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அதனை முன்னர் இருந்த நேரத்திற்கே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணை முகாமையாளர் எம்.என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

Related posts

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor

உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் நியமனம்

மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்