வகைப்படுத்தப்படாத

செல்பியால் உயிரை விட்ட மருத்துவர்!!

(UDHAYAM, COLOMBO) – அகலவத்தை – தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் மொழி பயிற்சிக்காக சென்றிருந்த நிலையில் , மாகெலிய நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயிருந்த கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

27 வயதுடைய குறித்த மருத்துவர் மாகெலிய நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ள நிலையில் அங்கு அவர் கால் தவறி நீர்வீழ்ச்சின் ஆழமான பகுதியில் விழுந்துள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள், கடற்படை இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினை தொடர்ந்து நேற்று மருத்துவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் கல்லொன்றின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து கொண்டிருந்த போது கால் வழுக்கி அவர் இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக பதுரலிய காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்