உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

01.01.2025 முதல் அரசாங்கம் இலங்கையர்களுக்கு பாதுகாப்பான புதிய e passport ஐ வழங்க தீர்மானித்துள்ளது.

மேலும் ஜூலை 16 முதல், கடவுச்சீட்டை பெற விண்ணப்பிக்க https://www.immigration.gov.lk/ என்ற இணைப்பின் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Related posts

சாமர சம்பத் எம்.பி க்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு!

editor

கம்பளை பாடசாலை மரம் முறிந்து விழுந்த சம்பவம் | இரண்டாவது குழந்தையும் உயிரிழப்பு !