உள்நாடு

அலி சப்ரி ரஹீம் MP பிணையில் விடுவிப்பு.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜரான போது, ​​அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் நியமனம்