காலநிலை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாளை (19) பிற்பகல் 1 மணி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம்  கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு உயரும் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடிய நிலை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்று

editor

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி உருவாகும் – மீண்டும் ஒரு குழப்பநிலை

editor

மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு

editor