உள்நாடு

இன்று அதிகாலை இரு சொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – சாரதி பலி, 8 பேர் காயம்.

குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் அதிசொகுசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8  பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும்  கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்

editor