உள்நாடு

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5 வீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்தது.

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த யோசனையை ஆராயப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வீட்டுப்பாவனை, மத ஸ்தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது சேவைகள் மற்றும் அரச நிறுவனங்கள் என்ற அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கான மின் கட்டணங்கள் நாளை முதல் குறையவுள்ளன.

மின் கட்டண குறைப்பை 10 வீதத்திற்கு மட்டுப்படுத்துவது தொடர்பில் மின்சார சபை யோசனை முன்வைத்திருந்தது.

எனினும் ஆணைக்குழுவினால் மொத்த மின் கட்டண குறைப்பு 22.5 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத ஸ்தலங்களில் குறைந்த மின் பாவனை பிரிவுக்கென இதுவரைக் காலமும் அறவிடப்பட்ட ஒரு மின் அலகிற்கு அறவிடப்பட்ட 8 முதல் 9 ரூபா வரை கட்டண அறவீடு 6 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

18 ரூபா வரையிலான மின் அலகு ஒன்றிற்கான விலையை 10 ரூபாவாகவும்,

32 ரூபா வரையிலான மின் அலகு ஒன்றிற்கான விலையை 20 ரூபாவாகவும்,

43 ரூபா வரையிலான மின் அலகு ஒன்றிற்கான விலையை 30 ரூபாவாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத ஸ்தலங்களில் அறவிடப்பட்ட மாதாந்த நிலையாக கட்டணமும் அனைத்து பிரிவுகளுக்குமென குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பாவனை மின்சாரத்திற்கான கட்டணமும் குறைவடைகிறது.

30 மின் அலகுகளுக்கும் குறைந்த மின் பாவனையின் போது மின் அலகு ஒன்றிற்கான விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

30 முதல் 60 புள்ளிகளுகிடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை