உள்நாடு

கடலில் மூழ்கி தென்கொரிய நாட்டு பெண் பலி.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற தென்கொரிய நாட்டு பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த அனரத்தம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்ட போது, ​​கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் அவரை கரைக்கு அழைத்துச் வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS]

கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள்

editor

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

editor